சம்பந்தனின் இல்லத்திற்கு முன்பாக நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் திருகோணமலையிலுள்ள இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
ஜே.வி.பியினரால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு எதிராக இதுவரை கொண்டுவரப்பட்ட அனைத்து நம்பிக்கையில்லா யோசனைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரித்தே வந்துள்ள நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஜே.வி.பியின் நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவளிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

