யாழ் சங்கானை பிரதேசசெயலக உத்தியோகத்தர் மதன்ராஜின் ரவுடித்தனம்!! ஓடியோ
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஒருவர் பேச்சுவார்த்தைக்காக இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்து, மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சங்கானை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தராக கடமை புரியும் மதன்ராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார்.
ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழகம் ஒன்று நிர்வாக தெரிவு கூட்டம் வைக்காமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் கழகமானது ஏனைய கழகங்களை போல் அல்லாது வருடா வருடம் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
ஜே/160 கிராம சேவகர் பிரிவில் உள்ள அந்த கழகத்தினை கடந்த ஆறு வருடங்களாக (2018.02.12ஆம் திகதி முதல்) நடாத்தியவர்களது ஆலோசனையையோ அல்லது அவர்களது பங்களிப்பையோ பெறாமல், நிர்வாக தெரிவு கூட்டமும் நடாத்தாமல் சங்கானை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவர் மூலம் அந்த கழகம் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புதிய நிர்வாகத்தில் இருப்பவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில், விரும்பியவர்களை தலைவர் செயலாளர், பொருளாளர் என பெயரிட்டு விட்டு கழகத்தினை பதிவு செய்யதுள்ளனர். ஆனால் ஏற்கனவே ஆறு வருடங்களாக கழகத்தினை நடாத்தியவர்கள் கடந்தகால ஆவணங்களை தமது கைவசம் வைத்துள்ளனர்.
எனவே ஆறு வருடங்களாக கழகத்தினை நடாத்தியவர்கள், “நிர்வாக தெரிவு கூட்டம் நடாத்தாமல் ஒவ்வொருவரும் தாங்கள் தான் நிர்வாகம் என்று எப்படி பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பி, நிர்வாக தெரிவு கூட்டத்தினை நடாத்தி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மதன்ராஜ் அவர்களிடத்தும், ஜே/160 பிரிவு கிராம சேவகரிடத்தும், யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் அவர்களிடத்தும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே கழகத்தினை நடாத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக யாழ்ப்பாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் அவர்கள் அழைத்திருந்தார். இந்நிலையில் கழகத்தினை ஏற்கனவே நடாத்தியவர்களும் இன்றையதினம் அங்கு சென்றனர்.
யாழ்ப்பாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் அவர்கள் வேறு அலுவலாக வெளியில் சென்றதால், அவருக்கு அடுத்த உத்தியோகத்தர் மற்றும் சங்கானை இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோருடன் இது குறித்து கலந்துரையாடுமாறு கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றவேளை, ஏற்கனவே கழகத்தினை நடாத்தியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் சரியான பதிலை வழங்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அத்துடன் அந்த கழகம் இதுவரை எந்த நிகழ்விலும் பங்குபற்றவில்லை என கூறினான். ஆனால் அதற்கு அந்த கழகத்தினர், ஏற்கனவே நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்திய பதிவுகளை பார்க்குமாறு கூறினர்.
இதனால் சரியான பதிலை வழங்க முடியாத இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மதன்ராஜ் அவர்கள் இளைஞன் மீது இரண்டு தடவைகள் தாக்குதலுக்கு முயற்சித்து தகாத வார்த்தைகளால் கடிந்து கொண்டார். இதன்போது தாக்குதல் நடாத்த விடாது மற்றைய பதவிநிலை உத்தியோகத்தர் தடுத்தார்.
இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் என்பவர் இளைஞர்களை சரியாக வழிநடாத்த வேண்டிய ஒருவர் ஆவார். அவரே பொய்களை கூறி, வன்முறையை தூண்டும் விதத்தில் செயற்பட்டால் இளைஞர்களை அவரால் எவ்வாறு சரியான பாதைக்குள் இட்டுச் செல்வ முடியும்?
ஜனநாயக முறைப்படி நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு இளைஞர்கள்கேட்டதற்கு, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் இவ்வாறான செயற்பாடு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த உத்தியோகத்தர் 8 வருடங்களுக்கு மேலாக சங்கானை பிரதேச செயலகத்தில், இடமாற்றம் இன்றி கடமை புரிகின்றார் என அறியமுடிகிறது
குறித்த உத்தியோகத்தரான மதன்ராஜ் அவர்களது இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும், யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி அவர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு சரியான தீர்வு கிடைக்கா விட்டால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அறிவித்தல் வழங்கிய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

