புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாயில் ஹேரோயின் பாவித்த 4 மைனர் குஞ்சுகள் கைது!! போட்டோ

யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு காவாலிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

5 கிராம் 465 மில்லிகிராம் ஹெரோயினுடன் கோண்டாவில் வீதி இருபாலையில் வைத்து நால்வரையும் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர். இதில் ஒருவர் போதைப்பொருள் வியாபாரி. ஏனையவர்கள் அவரிடம் பொதைப்பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது சிக்கியவர்கள்.

கைதானவர்கள் இருபாலை, கோண்டாவிலை சேர்ந்தவர்கள்.

ஹெரோயினை உடமையில் கொள்வனவு செய்து கொண்டு செல்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் இருபாலை வீதிக்கு விரைந்த பொலிசார் 2கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதான போதைப்பொருள் வியாபாரியையும், அவரிடம் போதைப்பொருள் வாங்கிய 24 வயதான இளைஞர் ஒருவரை 85 மில்லிகிராமுடனும், 25 வயதான இளைஞர் ஒருவரை 2கிராம் 20 மில்லிகிராமுடனும், 1 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடன் 24 வயதான இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

இதேவேளை இவர்களிடம் இருந்து ஊசிகளையும் கைப்பற்றிய நிலையில் குறித்த நால்வருக்கு எதிராக யாழ்ப்பபாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தம்மால் போதைப்பொருள் உட்கொள்ளாமல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் குருநகர் பகுதியில் இருந்து ஹெரோயின் கொள்வனவு செய்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
கடந்த சனிக்கிழமை கோப்பாய் டச்சு வீதியில் ஆசிரியை ஒருவரின் சங்கிலியை கொள்ளையடித்தவர்களில் இவர்களும் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.