பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு தண்டனை கொடுத்த நாய்கள்!
Williamstown பகுதியில் தனியாக வீதியில் சென்ற பெண்ணை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியா – விக்டோரிய மாநிலத்தில் williamstown இல் அமைந்துள்ள மாயனப்பகுதியில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் உரிய விசாரணை பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்தள்ளது.
குறித்த பெண் இரவு 8.30 மணியளவில் தனது இரண்டு நாய்களுடன் வீதியில் நடந்து செல்லும் போது பின்னால் வந்த நபர் இந்த பெண்ணை கீழே தள்ளியுள்ளார்.
இதன் போது கீழே தள்ளி அவரை துஷ்பிரயோகம் செய்ய குறித்த நபர் முயற்சித்த போது நாய்கள் இரண்டு அவரை தாக்க ஆரம்பித்துள்ளது.
நாய்களிடம் இருந்து தப்ப குறித்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவல்களுக்கமைய சந்தேக நபரை தேடு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

