புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p
ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதத்தில் மாணவன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் 7ஆம் யூனிட் பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்கிறார்கள். குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. தனது வீட்டுக்கு அடிக்கடி உணவு கேட்டு வருவதாக சிறுவனின் பாட்டி மரண விசாரணையில் தெரிவித்துள்ளார்.
புகையிரத சாரதி சாட்சியமளிக்கையில், புகையிரதத்துக்கு முதுகை காண்பித்தவாறு தண்டவாளத்தின் ஓரமாக சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், பல தடவை ஒலி எழுப்பிய போதும் சிறுவன் திரும்பிப் பார்க்கவில்லையென்றும், ரயில் நெருங்கியதும் தண்டவாளத்தின் நடுவில் வந்து முதுகை காண்பித்தவாறு அசையமல் நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





