புதினங்களின் சங்கமம்

யாழில் 29 வயது நீதுஜனைக் காணவில்லை!!

யாழ்ப்பாணம் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலுக்கருகில் வசிக்கும் 29 வயதுநீதுஜன் என்பவர் காணாமல்போய் விட்டார் என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

May be an image of 1 person, beard and smilingMay be an image of ticket stub and textMay be an image of 2 people, beard and people smiling