புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டு விசர் பிடித்து திரிந்த யாழ்ப்பாண ஆசிரியரை வலையில் வீழ்த்திய மேக்கப்காரி!!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து, பெரும் தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவரை, யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரன இந்த பெண், யாழ்ப்பாணத்தில் கருத்தரங்குகளை நடத்தி, அதன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்டுள்ளர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை பிரான்சுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் 42 இலட்சம் ரூபாவை இவர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இந்த பெண் கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்ணின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.