அலி, மயிர், குண்டி என்பன கொச்சைச் சொற்களா?? யாழ்ப்பாண அலிகளில் கருணை கொண்டவர்களுக்காக…
விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த நேரம்.1993ம் ஆண்டு காலப்பகுதியில் மருதனாமடம் சந்தைப்பகுதியில், வட்டிக்கு காசு கொடுத்து திரிந்த ஆண் ஒருவர் சாறி உடுத்து திரிகின்றார் என கேள்விப்பட்டு, அவரை பார்க்க நீண்ட துாரத்திலிருந்து, ரியூசனை கட் பண்ணி, சைக்கிளில் சென்று விடுப்பு பார்த்தேன். அந்த நேரத்தில் அவ்வாறு திரிந்தவர் அலி என பலரும் கூறிய போது, அப்படி என்றால் என்ன என்று புரியாத வயசு அது. அதன் பின்னர் அந்த விடயத்தில் பகுத்தறிவு வந்தவுடன் அலி என்பதற்கான விளக்கம் தெளிவாகப் புரிந்தது.
ஆண் குறியுடன் பிறந்து பெண்ணைப் போல் தங்களை கருதுபவர்களையே அலி என பலரும் கருதி வருகின்றனர். ஆனால் பெண் குறியுடன் பெண்ணின் கருப்பை மற்றும் உடல் அடையாளங்களுடன் வளர்ந்து வந்தாலும் தன்னை ஆணைப் போல் கருதுபவர்களையும் அலி என்றே கூறப்படுகின்றனர். அலி அல்லது அரவாணி என்ற வார்த்தை மிகப் புரதான தமிழ் இதிகாசங்கள் மற்றும் புலவர்கள், அறிஞர்களின் கருத்துரைகளிலேயே காணப்படுகின்றது.
உதாரணம்…
“ஆணாகி பெண்ணாகி அலியாகி உன்னடி சேர வேணும்.!”என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி என திருவம்பாவையில் 18 வது பாடல் உள்ளது.
மகாபார இதிகாச புராணத்திலும் சிகண்டி என்ற ஒரு அலியே பீஷ்மர் என்ற மாவீரனை கொன்றாள். பெண்களுடன் சண்டையிடுவதில்லை என்ற காரணத்தால் பீஷ்மர் அவளுடன் போரிடாது அவளது அம்புகளுக்கு இரையாகிப் பலியாகியதாக புராணம் கூறுகின்றது.
இவ்வாறு துாய புரதான தமிழ்ச் சொல்லான அலி என்ற சொல்லை கொச்சை சொல்லாக மாற்றியவர்கள் யார்?
2006ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியே அலி என்ற சொல்லிற்கு திருநங்கை என்று பொருள் கூறி அதனை தான் சார்ந்த ஊடகங்களில் முன்னிலைப்படுத்தி அலி என்ற துாய தமிழ்ச் சொல்லை திருநங்கை என்று மாற்றி கேவலப்படுத்தினார்.
அலி என்ற சொல் கொச்சை சொல்லாக மாறியதா? அல்லது அலி என்ற சொல்லுக்குரியவர்கள் கொச்சைச் செயற்பாடுகளால் மாறினார்களா?
அலி என்ற சொல்லுடன் அழைக்கப்பட்டவர்கள் தமிழகத்தில் கிட்டதட்ட 15 ஆயிரத்துக்கு மேல் காணப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோரின் நடத்தைகள் குற்றப்பின்னணியுடையவை. இவர்கள் தொடர்பான குற்றச் செயற்பாடுகள் அடிக்கடி ஊடகங்களில் வரத்தொடங்கிய பின்னரே அலி என்ற சொல்லே தவறான ஒரு சொல் என கருதப்பட தொடங்கியது. அலி அல்லது அரவாணிகள் என்றவுடனேயே தமிழகத்தில் அந்த சொல்லே ஒரு கேவலமான சொல்லாக மாறியது.
உதாரணமாக வடக்கு கிழக்கு தமிழர்களில் யாருக்காவது பிறக்கும் பிள்ளைக்கு மகிந்த அல்லது பிள்ளையான் அல்லது கருனா என்ற பெயரை வைத்துப் பாருங்கள்…. நான் சொல்ல வாறது உங்களுக்கு புரிகின்றதா?
அலி என்ற சொல் கேவலமான சொல் என்று மக்கள் கருதத் தொடங்கவே பல திரைக்கதைகள் எழுதி பிரபலமான, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அந்த சொல்லை அகற்ற முற்பட்டு 2006ம் ஆண்டு திருநங்கை என பெயர் வைத்தார். பெயர் மட்டும் மாறியதே தவிர திருநங்கைகளின் நடத்தைக் கோலங்கள் மாறவில்லை.
கருணாநிதி என்ன காரணத்துக்காக திருநங்கை என பெயர் வைத்தார்?
கருணாநிதி எப்படியான வம்பன் என்பது உங்களில் சிலருக்கு தெரியாது.
தமிழக சட்டப் பேரவையில், கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் ஆளும் கட்சியில் பெண் உறுப்பினராக இருந்தவர் என். அனந்தநாயகி.
ஒரு முறை அவர் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியில் இருந்த திமுகவை நோக்கி “எங்கே இருக்கிறது திராவிட நாடு?’ என்று கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்று “அந்த நாடாவை அவிழ்த்து…’ என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, “நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பிய ஒருவர்.
23ம் புலிகேசி படத்தில் வடிவேலு மலசலகூடத்துக்குள் உட்கார்ந்து யோசித்து சில விசயங்கள் செய்தது போல் கருணாநிதியும் அவ்வாறு யோசித்து உருவாக்கிய சொல்லே திருநங்கை. திரு என்பதற்கு செல்வம், அழகு, சிறப்பு என பல பொருள் உண்டு. நங்கை என்பதற்கு பெண் என்ற பொருள் உண்டு. அப்படியாயின் திருநங்கை என்ற சொல்லுக்கு சிறப்பான பெண் என்றே கருதப்பட வேண்டும்.சிலவேளை எமது சரஸ்வதி, லக்குமி, துர்க்கை என்பவர்களும் திருநங்கை என்ற கருத்துக்குள் வருவதற்கு இடம் இருக்கின்றது. கருணாநிதியின் இந்த பெயர் மாற்றத்திற்கு தமிழகத்திலிருந்து பல எதிர்க்குரல்கள் எழுந்தன. பல அறிஞர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் சமூகவலைத்தளங்கள் இல்லாத காரணத்தால் கருணாநிதியின் சன்ரீவி, கலைஞர் ரீவி போன்ற பலம் வாய்ந்த ஊடகங்கள் மற்றும் பல கருணாநிதி சார்பு பத்திரிகைகள் இருந்ததால் அந்த அறிஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவிடாது தடுக்கப்பட்டது.
அந்த அறிஞர்கள் கூறிய முக்கிய விடயம் என்னவென்றால் அலி என்ற வார்த்தை பிரயோகம் அழிக்கப்படுமாயின் பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட அலி என்ற சொல் 100 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் எதிர்கால தமிழ் சந்ததிகளுக்கு என்ன சொல் என்று அறியப்படாமலே போய் விடும் என கூறியுள்ளார்கள்.
தற்போது பல பேஸ்புக் அறிஞர்கள் அலி என்பதை கேவலமான வார்த்தை என பதிவிட்டுள்ளதை இங்கே காட்டியுள்ளோம்.
இதை விட யாழ்ப்பாணத்தில் தம்மை கருணாநிதிக்கு அடுத்த அறிஞர்களாக காட்டி தமக்குத் தாமே அறிஞர்கள் என பெயர் சூட்டி பேஸ்புக்கில் வலம்வரும் சில வெங்காயங்கள் திருங்கை என்ற சொல்லுக்கு அடுத்ததாக திருநம்பி என்ற சொல்லையும் சேர்த்துள்ளார்கள். அந்த திருநம்பிகள் யார் என்றால் அவர்களுக்கு பெண் குறி இருக்கும். ஆனால் ஆண்களின் குணம் இருக்கும். குறித்த திருநம்பிகளுக்கு பெண்களைக் கண்டால் மாத்திரமே காமம் உண்டாகுமாம். இவ்வாறு பல வெங்காயங்கள் புதுப்புது விதத்தில் தங்களுக்கு ஏற்றது போல் பெயர்களை சூட்டி வருகின்றார்கள்.
அது ஒரு புறம் இருக்க………….
யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில ஆண், பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து கடும் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். எயிட்ஸ் எனும் கொடிய நோய் இவ்வாறான ஓரினச்சேர்க்கையாளர்களின் மூலமே அதிகளவாக பரவுகின்றது குறிப்பிடத்தக்கது. அவ்வாறன துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் தங்களை தாங்களே திருநங்கைகள் என்றும் கூறி செயற்படுகின்றார்கள். இவர்கள் பிறப்பால் திருநங்கைகளாக இருப்பவர்கள் அல்ல. தமக்கான சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக திருநங்கைகளாக மாறியவர்கள். யாழ்ப்பாண சிறைச்சாலையில் 5 வருடம் சிறைத்தண்டனை பெற்று வெளியேறி வந்த ஒருவனும் தன்னை திருநங்கை என்று கூறிக் கொண்டு திரிகின்றான். இவன் சிறைக்கு செல்வதற்கு முன் ஆண் மகனாகவே உள்ளே சென்றான். தமது வித்தியாசமான பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பல சலுகைகளை பெறுவதற்காகவும் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றை மூடிமறைப்பதற்காகவும் யாழ்ப்பாணத்திற்கு பலர் அலிகள் என்ற போர்வையில் ஊடுருவி உள்ளார்கள். இவர்கள் மூலம் நோய் பரவல் மட்டுமல்ல பல கொடூர செயற்பாடுகள் அரங்கேறும் இடமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றது. இதற்கு யாழ்ப்பாணத்தில் தங்களைத் தாங்களே இலக்கியவாதிகள் என கூறி செயற்பட்டுவரும் துர்நடத்தையுடையவர்களும் ஆதரவாக உள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் தம்மை முற்போக்குவாதிகள் என கூறி பதிவுகள் இட்டுவரும் இவ்வாறானவர்களின் பின்னணி மிகவும் பயங்கரமானது…..
யாழ்ப்பாணத்தில் செயற்படும் கண் வைத்தியர் ஒருவரும் ஆண்களில் மிகுந்த ஆசை உடையவர் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. பல சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ள குறித்த கண் வைத்தியர் தனது இச்சையைத் தீர்ப்பதற்காக சில இளைஞர்களை தனது பிடியில் வைத்துள்ளாராம். இவர் குறித்த இளைஞர்களுடன் தன்னை ஒரு பெண் போல் பாவித்து உறவு கொள்வதாக தெரியவருகின்றது. இவ்வாறாக சமூகத்தில் உயர் அந்தஸ்தில் காணப்படுபவர்களும் அலி என்ற சொற்பதத்துக்குள் அடங்க மாட்டார்கள். குறித்த வைத்தியர் தனது தோற்றப்பாட்டை பெண்ணாக மாற்றாது ஆண் போன்ற கம்பீரத்துடனேயே செயற்படுகின்றார். ஆனால்….
மயிர் என்ற வார்த்தை கொச்சைச் சொல்லா? குண்டி என்ற துாய தமிழ் வார்த்தை கொச்சை சொல்லாக மாறியது எப்படி? இன்னொரு பதிவில் தருகின்றேன்…
நன்றி
வம்பன்

