புதினங்களின் சங்கமம்

வாழைச்சேனையில் 17 வயது மாணவனை வெள்ள நீர் அள்ளிச் சென்ற காட்சிகள் (வீடியோ)

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் தொடர்பிலும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பிலும் , நாம் விழிப்போடும் அவதானத்துடன் இல்லாது போனால் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருக்கும் – இன்றைய சூழலில் நீர் நிலைகளில் குளிப்பதும் தேவை இன்றி இறங்கி வீரம் காட்டுவதும் வேண்டாத ஒன்றாகும் – பிள்ளைகள் மாத்திரம் அல்ல பெரியவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது – நாசிவந்தீவு பகுதியில் நீராடிய வாழைச்சேனை அந் நூர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆதில் எனும் 17 வயது மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் இடம் பெற்றுள்ளது.இதுவரை மீட்கப்படாத நிலையில் குறித்த மாணவனை தேடும் பணி மீண்டும் நாளை காலை தொடரும் என கல்குடா டைவர்ஸ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
விழிப்புடன் இருப்பது மாத்திரம் அல்ல எம்மவர்கள் மத்தியில் அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கபடுபவர்களை மீட்கும் முறையான நீச்சல் பயிற்சி பெற்றவர்களும் அதிகம் உருவாக்கப்பட வேண்டும் எனும் அவசியம் இந்த மாணவனின் இறுதி நிமிடங்களை பார்க்கும் போது உணர முடிகிறது.