இப்படியும் மனிதர்கள்.!! காருக்கு நடந்தது என்ன?
இன்று வரும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்த போது இந்த காரை கண்டேன். அதை செலுத்திய அந்த மனிதர் மீதினில் பெருமதிப்பு ஏற்பட்டது.
ஆம் அவரது வண்டியின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு 3/4 வயதிருக்கும். நான் கையசைத்த போது பதிலுக்கு கையசைத்தாள் குதூகலத்துடன்.
பெற்றோல் நிரப்ப அந்த கார் நிறுத்தப்படும் வரை அந்த காரை ஏனோ பின் தொடர்ந்தேன்.
“என் மகள் தான் காரில் கீறியது,அதை பெயின்ட் மூலம் திருத்திக் கொள்ளலாம். பிள்ளைக்கு ஏசி என்னவாகப் போகிறது?” என்றார் தந்தை.
எத்தனை கருணையுள்ள மனிதரிவர் ? என்று எண்ணியவாறு பிள்ளையை பார்த்தேன் புதிய சித்திரக் கொப்பியில் புதிதாக வாங்கிய chalk colour கொண்டு எதையோ வரைந்து கொண்டிருந்தாள்.
இப்படியும் மனிதர்கள்..
Via Fauzuna Binth Izzadeen
இச்சம்பவம் குறித்து எனது நிலைப்பாடு, பிள்ளைகளுடன் அன்பாக இருப்பது கட்டாயம் ஆகினும் அவர்கள் (தவறாக) செய்யும் எல்லாவற்றையும் ஊக்கப்படுத்தும் வகையில் கணக்கிலெடுக்காது இருக்கவும் கூடாது. மாறாக பிள்ளைகள் ஒரு விடயத்தைத் தவறாக செய்யும் பட்சத்தில் அவற்றை அழகான முறையில் எடுத்துக்கூறுவதும். சரியான முறைகளை சொல்லிக் கொடுப்பதும் பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.
அவர்களுக்கு அன்பு காட்டுகின்றோம் என்ற பெயரில் பெற்றோர்கள் கணக்கிலெடுக்காது விடும் பட்சத்தில், தான் செய்தது சரிதான் என்ற நோக்கில் இன்னொருவரின் பெருமதியான பொருட்களை சேதப்படுத்தக் கூடும். உண்மையில் பிள்ளைகளுக்கு அவர்களிடம் காணப்படும் திறமையை வெளிக் கொணருவதற்கு சிறுவயதிலேயே ஊக்கப்படுத்த வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவற்றை ஓர் ஒழுக்குமுறைக்குள் மேற்கொள்வதற்கான தளங்களை அல்லது சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் நல்லது கெட்டதுகளை எடுத்துக் கூறினால் கேட்டுக்கொள்ளக் கூடிய தன்மை அவர்களுக்கு உண்டு. அத்தகைய தன்மையை பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவதும் பெற்றோர்களின் கையிலேயே உள்ளது.



