புத்தளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் ஜீப் சங்கக்கடைக்குள் புகுந்து நடாத்திய திருவிளையாடல் காட்சிகள்!!
புத்தளம் குட்சைட் வீதியில் பொலிஸ் ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத்தொகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து இடம்பெற்ற விபத்து நேற்று (15) மாலை பதிவானது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் பொலிஸ் ஜீப்பை திருப்ப முயற்சித்த போதே விபத்திற்குள்ளானது. விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

