முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபருக்கு 3 வருட சிறை!
கடந்த 2007 ஆம் ஆண்டு தனது வீட்டின் தனிப்பட்ட வேலைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறைப்பாட்டை பதிவு செய்தது.
இந் நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிவான் மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.