கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று வீட்டின் கூரைகள் பறந்த காட்சிகள்!!
பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் நேற்று இரவு திடீரென வீசிய காற்று காரணமாக 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்து. அத்துடன் குறித்த காற்றினால் பயன் தரக்கூடிய மாமரம் மற்றும் வாழை ஆகியன சரிந்துள்ளதுடன், வீட்டு வளர்ப்பு கோழிகள் 30 இறந்துள்ளதாக அனத்த முகாமைத்துவ பிரிவினருக்கு இன்றைய தினம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கண்டவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.




