புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியா ஐயர் அம்மா ஜெயந்தியின் காம வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணம், நகைகள் இழக்கும் கனடா தமிழ் குடும்பஸ்தர்கள்!!

வவுனியா வடக்கு நாவலடிப் பிள்ளையார் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் 2008ம் ஆண்டு வரை வசித்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவள் திருமணமாகி 2 குழந்தைக்கு தாயார். 41 வயதான இவள் திருமணம் முடித்தது பிராமணர் அல்லாத ஒரு இளைஞனை. வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் ஜெயந்தி தனது பிள்ளைகளுடன் இந்தியாவுக்கு சென்றுவிட்டாள். கணவன் இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக தெரியவருகின்றது. பிராமணர் சமூகத்தில் திருமணம் செய்யாத காரணத்தால் ஜெயந்தி தனது பெற்றோர் சகோதரங்களை பிரிந்து தனது பிள்ளைகளுடன் இந்தியா சென்றதாக கனடாவிலிருந்து ஜெயந்தியை சந்திக்க சென்ற அங்கிள் ஒருவர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வவுனியா ஜெயந்தி எனும் பெயரில் உலாவரும் இவள் அண்மையில் தனது சமூகவலைத்தளங்கள் அனைத்தையும் முடக்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம், இவள் தொடர்பாக சென்னைப் பொலிசாரிடம் கனேடிய தமிழ் அங்கிள் ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளாராம். தன்னுடன் பேஸ்புக்கில் நட்பாகி தன்னை தமிழ் நாட்டுக்கு வரவழைத்து, இந்திய ரூபா மதிப்பில் 12 லட்சம் ரூபா (இலங்கை பணம் கிட்டத்தட்ட 45 லட்சம்) மற்றும் மோதிரங்கள், சங்கிலிகள் அடங்கலாக 11 பவுண் நகைகளையும் பறித்தெடுத்தாக முறைப்பாட்டை கொடுத்துள்ளார். நட்பு ரீதியாக தன்னை தனது வீட்டுக்கு அழைத்து, தன்னை நிர்வாணமாக்கி வைத்திருந்த போது, அந்த வீட்டுக்குள் புகுந்த இரு ஆண்கள் தன்னை நிர்வாணத்துடன் வீடியோ எடுத்து தாக்கி தனது கனேடிய வங்கி அட்டை ஊடாக 12 லட்சம் இந்திய ரூபாகளை பணப்பரிமாற்றம் செய்ததாகவும் நகைகளைப் பறித்ததாகவும் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

ஆனால் கனடா அங்கிள் உடனடியாக இந்த முறைப்பாட்டை கொடுக்கவில்லை. 6 மாதங்களின் பின்னரே அந்த முறைப்பாட்டை தமிழ்நாட்டு பொலிசாரிடம் கொடுத்துள்ளார். பணப்பறிப்பு இடம்பெற்ற பின்னர் கனடா சென்ற அங்கிள் பின்னர் மீண்டும் திரும்பி வந்தே இந்த முறைப்பாட்டை கொடுத்துள்ளது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பணப்பரிமாற்றம் இடம்பெற்ற வங்கிகள் அனைத்தும் இலங்கையில் செயற்படும் வங்கிகள் என பொலிசாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சென்னையில் பாலவாக்கம் பகுதியில் வசித்து வந்த ஜெயந்தி தற்போது எங்கு இருக்கின்றாள் என்பது தெரியவில்லை. இவளது இரு பிள்ளைகளும் தற்போது சென்னையிலுள்ள கல்லுாரி விடுதியில் தங்கி கல்வி கற்றுவருகின்றார்கள் என பொலிசார் கூறுகின்றார்கள்.அதே நேரம் ஜெயந்தி தற்போது இந்தியாவில் இல்லை என்பதும் பிள்ளைகளிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே வேளை கனடா அங்கிள் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிசார் குறித்த அங்கிள் கனடாவில் உள்ள இந்துக் கோவில் ஒன்றின் தர்மகர்த்தா சபையில் உள்ளவர் என்பதுடன் 63 வயதானவர் என்றும் பொலிசார் தகவல்களைப் பொற்றுள்ளார். இதே வேளை குறித்த கனடா அங்கிளின் தகவல்களின்படி ஜெயந்தி தன்னை மட்டுமல்ல மேலும் பல கனடா வாழ் தமிழ்குடும்பஸ்தர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார் என பொலிசாருக்கு கூறியுள்ளார்.சமூகவலைத்தளங்களில் நட்பாகிய பின்னர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் தமிழ்க்குடும்பஸ்தர்கள் ஜெயந்தியை நட்பு ரீதியாக சந்திக்க அவளிடம் செல்லும் போது இவ்வாறான பணப்பறிப்புக்களை அவள் செய்துள்ளாள் என பரபரப்பு தகவல்களை குறித்த அங்கிள் கூறியுள்ளாராம்.

அவதானமாக இருங்கள் கனடா தமிழ் அங்கிள்களே…….