நாடு முழுவதும் மின்தடங்கல்!!
நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான மின்சார மார்க்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஏனைய பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

