திருகோணமலையில் மனைவியுடன் நடந்து கொண்டிருந்த போது அவுஸ்ரேலிய குடும்பஸ்தர் உயிரிழந்தார்
சிறீலங்காவுக்கு சுற்றுலா வந்த அவுஸ்ரேலியா நாட்டுக் குடிமகன் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, நிலாவெளி பகுதியில் நேற்றிரவு (30) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நிலாவெளி கடற்கரையில் கணவனும் மனைவியும் நடமாடிக் கொண்டிருந்த வேளை கணவனுக்கு நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளதஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளஉயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அவுஸ்திரேலியா – தஸ்மினியா நகரைச் சேர்ந்த ரொடோல் யோன் லெஸ்மன் (67வயது) என காவலதுறையினர் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டும் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அவுஸ்திரேலியா நாட்டுக்கு கொண்டு செல்ல தூதரகத்திற்கும் மனைவியால் அறிவிக்கப்பட்டுள்ளது.