சின்ன மகள் ஓடிவந்து, அப்பா “#புலிக் #குட்டி” வந்திருக்கு என்றாள்!
யாழ் சட்டத்தரணி Sugash Kanagaratnam பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
வருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்று மூளைக்குத் தெரியுது…ஏனென்றால் தன்னினத்தைத் தவிக்க விட்டுத் தப்பியோடி ஒளித்திருந்தால்தானே வரமுடியும்?
இறுதிவரை #உறுமியபடி காட்டிலிருந்த பரம்பரை அல்லவா!
என்றாலும் மனதிலொரு ஏக்கம்…! சின்னதாய் ஒரு நப்பாசை…! சிலவேளை குட்டிப் புலி ஒன்றாவது #தப்பியிருக்காதா என்ற பேராவல்…!
ஆசையில் எட்டிப் பார்த்தேன்…ஏற இறங்கப் பார்த்தேன்…உறுமலையுங் கேட்டேன்!
சத்தம் சரியாக இருந்தது…ஆனால் #ஒலிவடிவம் காட்டிக்கொடுத்து விட்டது.
அது புலிக் குட்டியல்ல…”பூனைக் குட்டி”!
மகளுக்குச் சொன்னேன் “பூனையைப் புலியாக்கப் பார்க்கின்றார்கள், #ஏமார்ந்து #விடாதே” என்று!
மகள் திருப்பிச் சொன்னாள், “அப்பா எனக்குந் தெரியும் அது புலிக்குட்டியில்லை பூனைக் குட்டியெண்டு…உங்களுக்குத் தெரியுதா எண்டு பார்க்கவே கேட்டன்” என்று கூறிச் சிரித்தாள்!
என்னால் #சிரிக்க #முடியவில்லை!
(இது சுகாஷின் தனிப்பட்ட கருத்து)

