யாழில் இரட்டை குழந்தைகளை பெற்று சுகமாக இருந்த விதுசா யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!! மருத்துவத் தவறா காரணம்?
யாழ்ப்பாணத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.
தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தாய் தீடிரென உயிரிழந்தமை அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

