யாழில் மாணவியான மனைவியின் தங்கையுடன் தொடர்பு!! அந்தரங்கத்தில் கடும் காயத்துடன் கணவன் வைத்தியசாலையில்!!
18 வயதான பாடசாலை மாணவியான தனது தங்கையுடன் கணவர் அந்தரங்க தொடர்பைப் பேணியதை அறிந்த மனைவி, கணவனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். திருநெல்வேலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கால் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் 28 வயதான குடும்பஸ்தர் அயலவர்களால் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். குறித்த குடும்பஸ்தர் தனியார் காப்புறுதிநிறுவனம் ஒன்றில் ஊழியராக கடமையாற்றுகின்றார். தென்மராட்சிப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட மனைவி தனது கணவருடன் திருநெல்வேலியில் வசித்து வந்துள்ளார். அவர் அரச அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்துவருகின்றார். குறித்த குடும்பஸ்தரின் மனைவியின் தங்கை தென்மராட்சிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்று வருகின்றார். சனி, ஞாயிறு தினங்களில் யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பதற்காக அக்கா வீட்டில் தங்கி நின்று சென்று வந்துள்ளார். இந் நிலையிலேயே குடும்பஸ்தருக்கும் மாணவிக்கும் அந்தரங்கத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மனைவி வீட்டி்ல் உள்ள நேரத்திலேயே இவர்கள் சில்மிசங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்றும் இவ்வாறு அந்தரங்கத் தொடர்பில் இருவரும் இருந்த போது மனைவியால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டனர். கடும் கோபமடைந்த மனைவி ஸ்கூட்றைவரால் கணவனின் கால்கள் மற்றும் தொடை, அந்தரங்கப் பகுதி போன்ற இடங்களில் குத்தி கிழித்துள்ளார். கடும் இரத்தப் போக்குடன் காயமடைந்த நிலையில் இருந்த கணவனை மனைவியே அயலவர்களுடன் மீட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.