Home புதினங்களின் சங்கமம் திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்து!! 20 வயது காவ்யாஞ்சலி பலி!! வீடியோ

திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்து!! 20 வயது காவ்யாஞ்சலி பலி!! வீடியோ

திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி பொலன்னறுவை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.