புதினங்களின் சங்கமம்

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x