புதினங்களின் சங்கமம்

வீதியில் படுத்திருந்த மாட்டுடன் மோதி யாழிலிருந்து சென்ற ஹன்டர் தலை கீழாக கவிழ்ந்தது!! பஸ் சேதம்!! வீடியோ

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம் பாரிய விபத்தை சந்தித்துள்ளது.ஓமந்தை வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்து கன்ரர் வாகனத்தை பின்னால் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.இதனால் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x