புதினங்களின் சங்கமம்

விடுதலைப்புலிகள் கேடுகெட்டவர்கள் என கூறிய தமிழ் திரைப்பட நடிகை குஸ்பூ யாழ் இசை நிகழ்வுக்கு வருகின்றார்!! வீடியோ

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குஸ்பு வருகிறார்!! புலிகளை பயங்கரவாதிகள் என கூறியவராம்!!

நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் இவ் இசை நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சிக்கு தென் இந்திய நடிகர்கள் நடிகை குஸ்பூ மற்றும் பாடகர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ள நிலையில் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழித்துக்கட்டியது வரவேற்கத்தக்கது என குஷ்பு அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இந்திய துாதரகம்அனுசரனை வழங்குகின்றது.  இந்திய துாதரகத்தில் குஸ்பு ரசிகரான தாத்தா யாரோ இருக்கின்றார் என்ற சந்தேகம் நிலவுவதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளது. எத்தனையோ புது மொடல்களான வாகனங்கள் இந்தியாவில் இருக்கும் போது பழைய கறல்பிடித்த வாகனத்தை எதற்காக இங்குகொண்டு வருகின்றார்கள் என்றும் கிண்டல்கள் எழுந்துள்ளன.

புலிகளைப் பயங்கரவாதிகள் என  குஸ்பு தெரிவித்த கருத்து பி.பி.சி இணையத்தளத்தில் வந்துள்ளது. அதனை கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்வையிடலாம்…

https://www.bbc.com/tamil/india/2014/11/141129_tigerkushboo