புதினங்களின் சங்கமம்

வீதியில் நெல் விதைத்து யாழில் நடந்த விசித்திரமான போராட்டம்!! (Photos)

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேச வாசிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக வீதி அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பபட்டடிருந்து.

இந்நிலையில் அண்மையில் தற்காலிக புனரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஆணைக்கோட்டை முதல் சுழிபுரம் வழக்கம்பரை வரையில் வீதி புனரைமைப்பு பணிகளுக்கு உள்ளான நிலையில் வழக்கம்பரை முதல் பொன்னாலை வரையான வீதி எதுவித புனயைம்புக்களும் இன்றி பாரிய கிடங்குகளுடன் காட்சியளித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை பொன்னாலை மற்றும் மூளாய் பகுதயினை சேர்ந்த விவசாயிகள் ,சிறுவர்கள் , பொதுமக்கள் இணைந்து காரைநகர் மானிப்பாய் யாழ்ப்பாணம் பிரதான வீதியின உழவு இயந்திரம் மாட்டு வண்டிலை கொண்டு இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக வீதியில் சேதமடைந்து காணப்பட்டட பகுதியில் ஏர் கலப்பை பூட்டி கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து தேவாரம் பாடி ஏர் உழுவது போல ஆற்றுகை செய்து நெல் மணிகளை வீதியில் விதைத்தனர். தொடர்ச்சியாக உழவு இயந்திரங்களாலும் வீதி உழுவது போல விழிப்புணர்விற்காக போராட்டகாரர்களால் நெல் விதைக்கப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x