புதினங்களின் சங்கமம்

யாழிற்கு அந்தரங்க தேவைக்காக இரவு வந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பல கோடி பெறுமதியான அரச கார் விபத்து!!

யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல தடவைகள் அரச வாகனத்தில் தனது அந்தரங்க தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வந்து செல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவ்வாறு வந்த அமைச்சரின் பல கோடி ரூபா பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனம்  விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்துக்குள்ளான வாகனத்தை அரசாங்க செலவில் திருத்துவார்களா? அல்லது ஜீவன் தொண்டமானின் சொந்த செலவில் திருத்துவார்களா? என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஜீவன் தொண்டமான் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இரவு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்களுக்கு சின்ன கதை ஒன்றை ஆபாசம் இல்லாது சற்று மாற்றிச் சொல்கின்றோம்…..

திருமணமாகாத ஒரு பணக்காரன், கலியாணம் கட்டி புருசனும் இருக்கிற ஒரு இளம் பெண்ணை கள்ளக்காதலியாக வைத்திருந்தானாம். இந்த விசயம் கள்ளக்காதலியின் புருசனுக்கு தெரியாது. தன்னிடம் வரும் போது தனக்கு ஒவ்வொரு முத்தம் தரும் போதும் ஆயிரம், ஆயிரமாகத் தர வேண்டும் என்று கள்ளக்காதலியின் உத்தரவு. அதனால் தனது கள்ளக்காதலியிடம்  ஒவ்வொரு தடவையும் செல்லும் போது ஆயிரக்கணக்கான பணத்துடன் போவானாம்.  ஒவ்வொரு தடவையும் போகும் போதும் அவன் கொடுக்கும் முத்தங்கள் எல்லாவற்றையும் எண்ணி அவன் மீண்டும் திரும்பிப் போகும் போது அதற்கான பணத்தை கள்ளக்காதலி பெற்றுவிடுவாளாம்.  ஒரு தடவை பணக்காரன் கள்ளக்காதலியிடம் போய் உல்லாசமாக இருக்கும் போது புருசன் கையும் மெய்யுமாக பிடித்துவிட்டான். அவர்களை இருவரையும் சேர்த்து கயிற்றில் கட்டி வைத்துவிட்டு பொலிசாருக்கு கோல் பண்ணினான். உடனே பொலிசார் அங்கு வந்துவிட்டார்கள். இருவரையும்  அப்படியே பொலிஸ் ஜீப்பில் போட்டு போய்க் கொண்டிருந்த போது தெருவில் உள்ள மேடு பள்ளங்களில் ஜீப் ஏறி இறங்கும் போது கள்ளக்காதலியின் உதட்டில் பணக்காரனின் உதடு முட்டி முட்டிக் கொண்டிருந்தது.  உடனே கள்ளக்காதலி அதையும் 1, 2, 3 என கணக்குப் பண்ணத் தொடங்கி விட்டாளாம்.  இதை பார்த்து அதிர்ந்த பணக்காரன் ”அடியே இது அரசாங்கச் செலவுடி… இதற்கு நான் காசு தரமாட்டன்”டி என்று கத்தினானாம்……

குறிப்பு – இந்தக் கதைக்கும் மேலே உள்ள காரின் புகைப்படம்  மற்றும்  பதிவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்….

வம்பன்………….