புதினங்களின் சங்கமம்

வவுனியா பொதுவைத்தியசாலைக்கு செல்லும் மக்களே அவதானம் -வெளியான அதிர்ச்சிக் காணொளி

சமூகவலைத்தளத்தில் பதவெளியாகிய பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.

வவுனியா பொது வைத்தியசாலையின் Lift (மின் தூக்கி) இடை நடுவில் பழுதடைந்த நிலையில் அதற்குள் சிக்கிய நோயாளிகள் மற்றும் வைத்திய சாலை ஊழியார்கள் சுமார் அரைமணி நேர கடும் முயற்சியின் பின்னர் மீட்கப்பட்ட சம்பம் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை (31.10.2023) பதிவாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக Lift (மின் தூக்கி) சரியான முறையில் இயங்கவில்லை என மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கின் காரணமாக இன்றையதினம் Lift (மின் தூக்கி) இல் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுகொண்டிருந்த வேளையில் இடை நடுவில் பழுதடைந்து Lift (மின் தூக்கி) இல் சிக்குண்ட நோயாளிகள் மற்றும் வைத்திய சாலை ஊழியர்கள் அரை மணி நேர கடும் முயற்சியின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மாவட்டத்தின் ஒரு பிரதான வைத்தியசாலையின் Lift (மின் தூக்கி) அடிக்கடி பழுதடைவதும் இன்றுவரை இவ் வைத்தியசாலைக்கு எவ்வித மின் தூக்கி இயக்குனர் (Lift operator) இல்லை என்பதும் கவலைக்குரிய விடயமாக உள்ள நிலையில் நோயாளிகள்,ஊழியர்களுடைய பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நோயாளிகள் தங்கிசிகிச்சை பெறும் இவ் வைத்தியசாலையின் இன்றைய நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது.
மேலும் இவ் வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளிகள் சரியான முறையில் கவனிக்கபடுவதில்லை எனவும் வைத்தியர்களும் இவ் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்களின் அசமந்த போக்கின் காரணமாக பல நோயாளிகள் ஆபத்தின் தருவாயில் இருப்பதாகவும் வவுனியா பொது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். அண்மைக்காலங்களாக வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பில் பல பிரச்சினைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டலும் மக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதாக இல்லை. இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.