புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் தனியே வசித்து வந்த இளம் மனைவி, கணவன் ஆகியோர் காணாமல் போனதால் பரபரப்பு!!

முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பமொன்று காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.காணாமல் போன பெண்ணின் தாயாரே இந்த முறைப்பாட்டை செய்தார்.தனது மகளும், மருமகனும் தனியாக வசித்து வந்ததாகவும், தொலைபேசியில் பேசி வந்த மகள், கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் பேசவில்லையென்றும், அவரது தொலைபேசியை தொடர்புகொள்ள முடியாததையடுத்து, அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, மகளையும், மருமகனையும் காணவில்லையென முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.முள்ளியவளை பொலிசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.