வட மாகாணசபை விவசாய அமைச்சு ஊழியர்கள் சற்று முன் யாழ் நாவலர் வீதியில் பொங்கி எழுந்தது ஏன்??(Photos)
வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தில் இன்னொரு அதிகாரியால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள விவசாய அமைச்சு அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சற்று முன் வீதிக்.கு வந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் வவுனியா அலுவலகத்திலும் நடந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்துக்கு காரணமான நேற்று நடந்த சம்பவம் இதுதான்…..
மாகாண கணக்காய்வுகுழு கூட்டத்தில் இடம்பெற்ற பெரும் களேபரத்தின் பின்னர், வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகம், அணிகளாக பிரிந்து
செயற்படல், ஊழல், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கல் போன்ற செயற்பாடுகளை
ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இதனால் முறையான- வினைத்திறனான- நிர்வாகத்தை நடத்த முடியாமல் வடக்கு விவசாய
திணைக்களம் திண்டாடியது. வடக்கு விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகளிற்கு வேண்டிய,
கீழ்மட்ட பணியாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தகவல்களும் வெளியாகி வந்தன.
கடந்த சில வருடங்களில் வடக்கு விவசாய திணைக்களம் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்த
நிலையில், அதை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய விவசாய திணைக்களத்தில் பணியாற்றிய
ஷகிலா பானு என்ற அதிகாரியை, மாகாணத்தில் பணியாற்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், அவர் வடக்கில் பணியாற்ற வருவதை வடக்கு விவசாய திணைக்களத்தின் ஒரு அணியினர் விரும்பவில்லை, இடையூறுகள் ஏற்படுத்தினர் என செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் எதிர்ப்பையும் மீறி வடக்கு முதல்வர் அவரை மாகாணத்தில் இணைத்தார்.
வவுனியா மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தின்
முன்னர் வவுனியா விவசாய பண்ணையில் பெரும் ஊழல் மோசடிகளை அவர் ஆதாரபூர்வமாக
அம்பலப்படுத்தினார். அது குறித்த அறிக்கைகள் வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளரிற்கு
வழங்கப்பட்டும், ஊழலுடன் தொடர்புடைய முகாமையாளர் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்களை வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளரும் காப்பாற்ற முயல்கிறார் என்ற விமர்சனங்கள் அப்பொழுது எழுந்திருந்தது.
இந்த நிலையில் வவுனியா விவசாய பணிப்பாளரிற்கு எதிராக, வடக்கு விவசாய திணைக்களத்தின்
ஒரு அணியினர் செயற்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று மாகாண கணக்காய்வுகுழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது அணி மோதல் இடம்பெற்றதாக தெரிகிறது.
கூட்டத்தின் பின்னர், வவுனியா விவசாய பணிப்பாளர் தொலைபேசியில் உரையாடியபடி தனது
வாகனத்தை நோக்கி சென்றுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர்
உகநாதனின் வாகனத்தை கடந்து சென்றார். அப்பொழுது வாகனத்திற்குள் இருந்த உகநாதன் திடீரென வாகன கதவை பலமாக திறந்து மூடினார். தொலைபேசியில் பேசியபடி வந்த வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் வாகன கதவால் தாக்கப்பட்டு, காயமடைந்தார். உடனடியாக அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.