புதினங்களின் சங்கமம்

யாழ் ஆவரங்காலில் ஐ.ஓ.சி பெற்றோல் நிரப்பு நிலையம்!! லட்சக்கணக்கில் ஊழலா? மதகு மூடப்பட்டு கட்டடம்!!

யாழ் ஆவரங்காலில் வெள்ளம் வழிந்தோடும் மதகை மூடி பெற்றோல் நிலையம் ஒன்று அச்சுவேலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வெள்ள மதகை மூடி இவ்வாறு கட்டப்படுவது தொடர்பாக, பிரதேசசபை மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட்டவர்களுக்கு முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த கட்டடத்திற்காக பல லட்சம் ரூபா லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சில தரப்புக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.