புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு பொதுமகனை கொடூரமாகத் தாக்கும் மனித மிருகங்களான பாதுகாப்பு உத்தியோகத்த காவாலிகள்!! வீடியோ

சமூகவலைத்தளங்களில் வெளியாகிய மற்றுமொரு வீடியோப் பதிவினையும் கருத்துக்களையும் நாம் இங்கு தந்துள்ளோம்.

ஏற்கனவே வெளியாகிய இந்த வீடியோ இன்று நடந்த சம்பவமாகும். இது சமூகவலைத்தளங்களில் வெளியாகியவுடன் சத்தியமூர்த்தி தன்னை நல்லவன் என காட்டிக் கொள்ள இப்படி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அந்த விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் , வைத்தியசாலைக்கு கடமைக்கு அனுப்ப வேண்டாம் என பாதுகாப்பு நிறுவனத்திடம் தான் அறிவித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு அறிவித்துள்ளேன்.பொதுமக்கள் வைத்தியசாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக்கூடாது என மேலும் தெரிவித்தார்.

இந்த வீடியோ இதுவரை வெளிவராதது

காவலாளிகள் எப்படி ஒருவரை தாக்குகின்றார்கள். இவ்விடயம் ஏற்கனவே சத்தியமூர்த்தியால் மூடி மறைக்கப்பட்டது. இதற்கு சத்தியமூர்த்தி ஐயா என்ன பதில் கூறப்போகின்றார். சத்தியமூர்த்தி ஐயா யாழ் போதனாவைத்தியசாலையில் நடக்கும் கொடூரங்களை, உண்மைகளை மறைப்பதும் அவை ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளிவந்தவுடன் தன்னை நல்லவன் என காட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கின்றேன் என கூறி மக்களிடம் நல்ல பிள்ளை என பெயர் வாங்குவதும் உங்களுக்கு அத்துப்படியான விடயம் போல் தெரிகின்றது….. இவ்வாறான கொடூர காவாலிகளை எதற்காக யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் வைத்திருக்கின்றீர்கள்? சத்தியமூர்த்தி ஐயா உங்களைப் பற்றிய சில கதைகள் உலாவுகின்றது? அது உண்மையா? நீங்கள் ஒரு விடயத்தில் அவர்களிடத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்டு பிடிபட்டதால் அந்த பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த காவாலிகளுக்கு கடமைப்பட்டுள்ளதாக சில தகவல்கள் பரவுகின்றது…. இது உண்மையாக இரு்ககுமா?

இந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் இவ்வாறு தொழிற்படுவது பாதுகாப்பு நிறுவனத்தின் தவறு என்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாதது போல் நடக்கின்றீர்களா?? இவர்களை யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து துரத்தினாலும் இந்தக் காவாலிகள் இதே நிறுவனத்தில் இன்னொரு இடத்தில் போய் இதே செயற்பாடுகளைத்தான் செய்யப் போகின்றார்கள். ஆகவே நீங்கள் சிறந்த நடிகனாக மக்கள் முன் நிற்கின்றீர்கள். அரசியலுக்கு வருவதற்காக ஆசுப்பத்திரியை நன்றாகப் பயன்படுத்துகிறீரா சத்தியமூர்த்தி……