சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
இன்று 13.10.2023 எனது மோட்டா் சைக்கிள் மக்கர் பண்ணியதால் எனது வழமையான பேருந்தை தவறவிட்டு காலை 7.30 யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கண்டி வழித்தட பேருந்தில் யாழ் கச்சேரியடியில் இருந்து கிளிநொச்சிக்கு பயணம் செய்ய நேரிட்டது குறித்த வழித்தடத்தில் கிளிநொச்சி செல்வதற்கு அனுமதி உண்டு. ஆயினும்…குறித்த சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது…..
பயணப் பையை எடுத்து உரிய இடத்தில் வைத்துவிட்டு அமர்ந்த பயணி மீது பயணப்பையில் இருந்த 10000/- ரூபாயை காணவில்லை என நடத்நுநர் அநாகரிகமான முறையில் நையப்புடைப்பு ….அருகில் இருந்த கிளிநொச்சி அரச உத்தியோகத்தர் குறித்த பயணி பையினுள் கை வைக்கவில்லை எனவும் பொலிசில் முறையிடுவதற்காக பேருந்தை செலுத்துமாறும் கோரிக்கை விடுத்த போது நடத்துநரும் ஓட்டுநரும் குறித்த அரச உத்தியோகத்தர் அம்ர்ந்து இருந்த முன் பக்கத்தின் இரண்டாவது இருக்கை online ல booking செய்யப்பட்ட இருக்கை உடனடியாக இடத்தை விடச்சொல்லி கூறி தகாத வார்த்தைகளால் அவரை தொடர்ச்சியாக நையப்புடைத்துக்கொண்டு வந்தமை காரணமாக…..
online booking செய்யப்பட்ட ஆதாரத்தை காட்டி ஏன் அவரை எழுப்பக் கூடாது என்று நான் வினவிய போது நான் ஓட்டுநர் மற்றும் நடத்தநரால் அநாகரிகமான வார்த்தைகளால் நையப்புடைக்கப்பட்டதுடன் நடத்துநரால் உள்பக்கமாக கடுமையான பலத்துடன் தள்ளி விடப்பட்டேன் அத்துடன் அவர்களுடைய அதட்டல்களும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களும் நாம் வேறு வழித்தடத்துக்கு உரியவர்கள் எனவும் அரச உத்தியோகத்தர்களின் கடமை தொடர்பிலும் கேள்விக்குட்படுத்தி நீண்ட நேரமாக அடங்கவில்லை. நாங்கள் கிளிநொச்சியில் இறங்கும் வரை குறித்த ஆசனத்தினை முன்பதிவு செய்த்தாக எந்த பயணியும் வரவில்லை. குறித்த வழித்தட பேருந்தில் வழமையாக இவ்வாறு நடைபெறுவதாகவும் (10000/-காணவில்லை)இது தொடர்பாக கிளிநொச்சியில் தனியார் நிறவனங்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் சிலர் உரிய இடங்கள் மற்றும் கொழும்புக்கு அறிவித்தும் எந்த பலனும் இல்லை என சக பெண் உத்தியோகத்தர் ஒருவர் சலித்துக்கொண்டார்.






