புதினங்களின் சங்கமம்

நண்பன் நித்திரை!! நள்ளிரவில் வீடு புகுந்து நண்பனின் மனைவியுடன் உறவு கொள்ள முற்பட்ட சிங்களவனுக்கு நடந்த கதி!!

தனது நெருங்கிய நண்பனின் வீட்டுக்குள் நள்ளிரவில் இரகசியமாக நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல இலக்கம் 02 நீதவான் மஞ்சுள கருணாரத்ன நேற்று (09) உத்தரவிட்டார்.பஸ்யால பொலன்கந்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் தனது நெருங்கிய நண்பரின் வீட்டிற்குள் நள்ளிரவில் இரகசியமாக நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த நண்பரின் இருபது வயது மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நிட்டம்புவ பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.சந்தேகநபர் நண்பரின் திருமணத்தில் இரண்டாவது மாப்பிள்ளை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.