புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் தனியே இருக்கும் பெண்களிடம் கொள்ளையடித்து சில்மிஷம் செய்யும் 2 காவாலிகள் கைது!! (Photos)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேசங்களில் வீதியால் சென்ற பெண்களை மோட்டர் சைக்கிளில் பின்தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருந்து தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையடித்து சென்ற அக்கரைப்பற்றைசச் சோந்த இருவரை நேற்று புதன்கிழமை (4) மட்டு செட்டிபாளையத்தில் வைத்து கைது செய்ததுடன் கொள்ளையிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்;.கடந்த மாதம் களுவாஞ்சிக்குடி காத்தான்குடி மட்டக்களப்பு நகர் கொக்கட்டிச்சோலை பிரதேசங்களில் வீதியால் தனிமையில் நடந்து சென்ற மற்றும் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்களை மோட்டார்சைகிளில் இருவர் பின் தொடர்ந்து அவர்களின் களுத்தில் இருந்த தங்க சங்கிலிகளை அறுத்து எடுத்து கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிசார் விசாரணைணகளை மேற்கொண்டுவந்தனர்.இந்த நிலையில் செட்டிபாளையம் கோவில் ஒன்றிற்கு அருகாமையில்; மோட்டர்சைக்கிளில் கொள்ளையர்கள் வீதியில் நிற்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று பகல் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.அபேய விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.பிறைசன் யோய் தலைமையிலான ரமணன் பிரதீபன் பிறேமதிலக பிரசன்னா விதுசன் சதா கிசோர் ஆகிய பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரையும் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் கொள்ளையிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்கள் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.இருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் காத்தான்குடியில் திருமணம் முடித்து வாந்துவரும் நிலையில் இருவரும் மோட்டர்சைக்கிளில் களுவாஞ்சிக்குடி காத்தான்குடி மட்டக்களப்பு நகர் கொக்கட்டிச்சோலை பிரதேசங்களில் தனியர் கல்வி நிலையங்களுக்கு கல்விகற்க சென்று தனியாக வரும் மாணவிகள் மற்றும் தனியாக வீதியால் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

May be an image of 2 people and people smilingNo photo description available.