Vampan memesபுதினங்களின் சங்கமம்

யூரியுப் பார்த்து யாழ்ப்பாணத்தில் நடக்கும் திருவிளையாடல்கள்!! மக்களின் உயிருடன் விளையாட்டு!!

பிளாஸ்டிக் நிறுவனம் எனும் பெயரில் எந்தவித அடிப்படைத் தகுதிகளும் அற்ற நபர்கள் நடாத்தும் கூத்து பலரின் உயிருக்கு உலை வைக்கும் செயற்பாட்டில் முடிவடையவுள்ளது. யூரியுப் பார்த்து விமானம் ஓட்டப் பழகுவது மற்றும் மருத்துவ சத்திரசிகிச்சை செய்வது போன்று யூரியுப் பார்த்து மின்சார காற்றாடியை பயன்படுத்தி அடுப்பை செய்து தனது நிறுவனம் எனும் பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஒருவர். தற்போது இலங்கையில் மிகவும் திண்டாடி வரும் பொருளாதாரப் பிரச்சனையில் முக்கிய இடம் வகிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை இலக்கு வைத்து கோடிக்கணக்கின் பணம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில் இவ்வாறான சிலர் செய்யும் திருவிளையாடல்கள் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் தமிழ் நாட்டில் பொறியியல் நிறுவனம் ஒன்று தயாரித்து யூரியுப்பில் வெளியிட்ட அடுப்பை அப்படியே பார்த்து தானும் தரமாக அடுப்பு செய்கின்றேன் என செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அடுப்பு முற்றிலும் தகரத்தால் ஆனது. அத்துடன் மின் இணைப்பையும் கொண்டு விறகு அல்லது சிறட்டைக் கரியில் எரிவது. காற்று சீராக்கிகள் சரிவர அடுப்பு பாவிப்பவர்களால் பராமரிக்க முடியாது விடிலோ அல்லது தகரம் கொதிநிலை அடைந்து சூடேறினாலோ அடுப்பு பற்ற வைத்த ஆத்துக்காரி தேவலோகத்தில்தான்.

அத்துடன் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 5 ஆயிரம் ரூபாவுக்குள் கிடைக்கும் இந்த அடுப்பின் விலை என்ன என ஒரு பெண்மணி கேட்ட போது அதற்கு அவர்களின் திமிர்த்தனமான பதிலும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சரியான விலையை குறிப்பிடாது யாழ்ப்பாண மக்களை ஏமாற்றி பிழைக்கத் திரிவதற்கு ஏமாளிகளே காரணமாகும். அதில் நீங்களும் ஒருவராக முயலவேண்டாம். இந்த வீடியோவின் 45வது செக்கனில் என்ன நடக்கின்றது பாருங்கள். இதனை வாழ்த்தியும் இதன் பாதிப்பு தெரியாது பல செம்மறிகள் அதை பகிர்ந்தும் உள்ளார்கள்.

May be an image of text that says "Sivarajan இந்த அடுப்பை விட மிகவும் நேர்த்தியாக தென்பகுயில் உற்பத்தி செய்து விற்பனைக்கு விடப்பட்டுள்ள அடுப்பின் விலை 5300 ரூபா. அதன் புகைப்படம் இணைத்துள்ளேன். இந்த அடுப்பின் விலை என்ன? நியாய விலையில் நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஊக்கப்படுத்தி வெளிக்கொண்ட இந்த முகப்புத்தகப் பக்கம் உதவி செய்கின்றது. முயற்சிக்கவும். முன்னர் நான் இட்ட கொமன்ஸ் அழிக்கப்பட்டுள்ளது.அ அழிக்க வேண்டாம்.. அதிக விலைக்கு விற்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மக்களை மீண்டும் சுரண்ட வேண்டாம். t4 Jaffna Hero .com News & media website jaffna Like Reply 6h Dayanaplastic Recycle Tharsini Sivarajan ஐயா நான் செய்யுறது பிசினஸ் சமூகசொவை கிடையாது மலிவான பொருள் இருந்தால் உங்க பேஸ்புக்ல போட்டு விமர்சிக்கிறது நல்லாத இருக்கும் என்று நான் நினைக்கிறேன். Like Reply 6h"