வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி – பாட்டி கவலைக்கிடம்?? (வீடியோ)
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் பலியகியுள்ளனர் என தெரியவருகின்றது.வாழைச்சேனை பிரதான வீதி சந்திவெளி பகுதியில் இன்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த தாத்தாவும் பேத்தியும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளது இருந்தும் இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.உயிரிழந்த சிறுமியின் தந்தை கட்டாரில் உள்ள நிலையில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதேவேளை சிறுமியின் பாட்டி அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட வாகனம் பாதையில் இருந்து வழுக்கிச் சென்று மரம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.தற்போது பெய்து வரும் மழை காரணமாக வாகனம் செலுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.







