புலம்பெயர் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நிந்தவூர் எழுத்தாளர் ராஜகவி!! பேஸ்புக்கில் கிழிக்கும் தமிழிச்சி!!
கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மணிமேகலை கைலைவாசன் அவர்களது பேஸ்புக்கில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கண்டால் சொல்லுங்கோ தேடுறமெண்டு .,
இன்னமும் எங்கள் பணத்தை இவர் திரும்பித்தரவில்லை .முகநூல் நட்புவட்டத்தில் எம்மை முடக்கியும் தொலைபேசித்தொடர்புகளைத் துண்டித்தும் சில வருடங்களாக இவர் ஓடி ஒளிந்துகொண்டார் .பல கடிதங்கள் போட்டும் பதில் இல்லை . நேரில் நிந்தவூர் இவர் இல்லம் தேடிச்சென்றபோது அங்கிருந்த பெண்மூலம் வீட்டுக்குள் இருந்தபடியே தான் இல்லெயெனச் சொல்லவைத்தார் .தமிழை வளர்க்கிறேன் உதவுங்கள் எனும் பெயரில் புலம்பெயர் மண்ணில் வாழும் பலரிடம் பணத்தை வாங்கி பிழைப்பு நடத்தும் எழுத்தாளர் எனும் பெயரில் உலாவும் ராஜகவி ராகில் எங்கள் பணத்துக்கான பதிலை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும் . இவரை யாராவது பொதுமேடைகளில் கண்டால் உடனடியாக அறியத்தாருங்கள் .இவரது பல நூல்கள் வெளியிட உதவியிருக்கிறோம் .திருப்பித்தருவதாக கூறி வாங்கிய பணத்தைத்தான் கேக்கிறோம் . நூல்களுக்கு கொடுத்த பணத்தை நாம் திரும்பக் கேட்கவில்லை.ஏழு வருடங்களாக அவர் பல பொய்களைச்சொல்லியே எங்களிடம் பணத்தை வாங்கியிருக்கிறார். பி்ரதான பொய்கள் மனைவிக்கு மருத்துவச் செலவு . மகளின் படிப்புச்செலவு .நட்பின் அடிப்படையிலும் தமிழ் மீதான மரியாதையினாலும் இவருக்கு மரியாதை கொடுத்தோம் .அவர் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய விடயத்தை ஏமாந்த பலர் என்னிடம் சொல்லியுள்ளனர் . அதிகமானோர் பெண்களே.அவரது தனிப்பட்ட வாழ்வியலை நான் இங்கே பேச வரவில்லை . பல லட்சங்கள் அவர் எமக்குத் தரவேண்டும் .இதற்கான பதிலை அவர் தந்தேயாகவேண்டும் .இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இவர்பற்றி பதிவிட்டேன் . அவருக்குத் துணையான சில ஊடகங்களும் இதுபற்றி அறிந்த நண்பர்களும் மௌனமாக இருப்பது வேதனையே.
இனி ஏதாவது ஒரு மீடியா மூலம் தான் இவர்பற்றி வெளியுலகுக்கு சொல்லவேண்டும் போல இருக்கு .பனியிலும் மைனஸ் 40 க்கும் மேற்பட்ட குளிரிலும் கைகால் விறைக்க விறைக்க பத்திரிகை விநியோகம் செய்தபணமும் தொழிற்சாலைகளில் இரவு பகலாக உழைத்த பணமும் இதில் உண்டு.யாருமற்ற அநாதைக்குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் மகிழ்ந்திருப்பேன் இந்தமாதிரி ஒருவரை வளர்த்துவிட்டமைக்காக மனம் வருந்துகிறேன் . இதுபோல் இனி மேல் யாருக்கும் நிகழவேண்டாம் என்பதற்கே இந்தப்பதிவு. உள்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருக்கும் பலர்மீதே இவர் கவனம் உள்ளது .பணமே பிரதானமாக உள்ளது .எச்சரிக்கையாக இருங்கள் .எங்கள் பங்களிப்பு எவ்வளவு என்பதை இவரது நூல்களை வாங்கிப்பாருங்கள் தெரியும் .நம்பிக்கைத் துரோகம் பொய் என்றுமே நிலைக்காது .ராஜகவி ராகில் அவர்களே தமிழ் தானாகவே வளர்வது .நீங்கள் அதன்பெயரைச் சொல்லவே அருகதையற்றவர் . முடிந்தால் தைரியமாக என்னோடு பேசுங்கள் . என் பணத்தையும் திருப்பத்தரும் ஏற்பாட்டோடு .





