புதினங்களின் சங்கமம்

யாழ் போதனாவைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சென்ற 8 வயதுச் சிறுமியின் கையை வெட்டி அகற்றிய கொடூரம்!! சத்தியமூர்த்த என்ன சொல்லுகின்றார்?

யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை போலவே காச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையை கழற்றும் அளவிற்கு வைத்திய தவறு ஒன்று நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

தாதியர் ஒருவர் நாளத்தில் ஏற்றவேண்டிய Antibiotics ஐ நரம்பில் ஏற்றியதால் இந்த பரிதாப நிலை சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது.

சிறுமி வலியால் அழுது துடித்த போதும் அது காச்சலால் என தாதி பதிலளித்துள்ளார். குறிப்பாக அவ் குறித்த விடுதிக்கு பொறுப்பாக பல வைத்தியர்கள் அதாவது Consultant Paediatrician, SHO, HO, Head Nurse உட்பட தாதியர்கள் பலர் என கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்த போதும் குறைந்தபட்சம் விடுதியில் இரவு கடமையில் இருக்க வேண்டிய HO உட்பட எவரும் இப்பிரச்சனையை கவனிக்கவில்லை.

தவறான இடத்தில் Antibiotics ஐ ஏறியதால் பிள்ளையின் கையை பாதிப்படைய செய்தது. இதனை அடுத்தே அவசர அவசரமாக செயற்பட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் கையை கழற்றியுள்ளனர்.பல பேரின் உயிரை காப்பாற்றும் வைத்தியர்கள் இப்பிள்ளையின் கையை கழற்றிய சம்பவம் வைத்திய துறையின் கறைபடிந்த விடயமாக மாறியுள்ளது.

உயிரை காப்பாற்றும் உன்னத துறை சட்டங்களை தமக்கு சார்பாக மாற்றிக்கொண்டு வியாக்கியானம் கூறுவதுடன் கடந்து போகின்றனர்.இந்த பொறுப்பற்ற நிலைக்கு சிறுமியின் பெற்றோரும் இயல்பாக கடந்து போகாமல் இப்படியானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி செயற்படுவதே இத்தகைய தவறுகள் ஏற்படுவதை தடுக்கும்.

தங்கள் தவறை மறைக்க ஆயிரம் செய்வார்கள். அதற்காக சட்டத்தின் முன் நிறுத்துவதை தவிர்க்க கூடாது. தவறு இழைத்தவர்களுக்கு படிப்பினையாக கூட இருக்கும்.இவ்வாறான தவறு இழைப்போருக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில்,

இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்தார். “கனிலா செலுத்திய போது அல்லது மருந்து செலுத்தும் போது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதனால் கையின் கீழ் பகுதிக்கு இரத்தம் செல்ல முடியாமல், கை செயலிழந்துள்ளது. இதனால் கையை அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது.அது தொடர்பான பூரண விசாரணை நடந்து கொண்டிருக்கிறது“ என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.