யாழில் 16 வயது மாணவன் போதைப் பொருளுடன் கைது!! போதைப் பொருள் விற்றவராம்!!
யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.