யாழ். அச்செழு பகுதி பூலசிட்டியில் காவாலிகள் இருவருக்கிடையில் நடந்த மோதல் கொலையில் முடிவடைந்துள்ளது.
20 வயதான திவின்சன் என்ற காவாலி கத்தரிக்கோலால் குத்தியதில் மேனுஜன் என்ற 20 வயது காவாலி உயிரிழந்துள்ளான். இவர்கள் இருவரும் மட்டுமல்ல இவர்களுடன் மேலும் பலர் சேர்ந்து குழுவாக போதைப்பொருள் பாவிப்பவர்கள் எனத் தெரியவருகின்றது. அ்த்துடன் இவர்கள் போதைமாத்திரை விற்பனை முகவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
அதி வேகத்தில் அப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தவதுடன் காவாலித்தனங்கள் செய்வதில் இவர்கள் படுமோசமானவர்கள் எனவும் அப்பகுதிக்கு அண்மையில் வாழ்பவர்கள் கூறுகின்றார்கள்.
போதைப்பொருள் பாவித்த பின் இவர்கள் அப்பகுதியில் செய்யும் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானது எனவும் இவர்களது குடியிருப்புகளுக்கு சற்றுத் தொலைவில் உள்ளவர்கள் கூறுகின்றார்கள். தற்போதும் மரண வீட்டில் பொலிசார் சுற்றி வளைப்பு நடாத்தி தேடுதல் செய்தால் பலர் போதைப்பொருள் பாவித்தபடியும் போதைப்பொருளுடனும் பிடிபடுவர்கள் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இறந்த மேனுஜன்

மேனுஜனைக் கொன்ற காவாலி திவின்சன்

கொன்றவனும் இறந்தவனும் தனித் தனி மோட்டார் சைக்கிள்களில் தமது காவாலி நண்பர்களுடன் ஒன்றாக நிற்கும் காட்சி.. நடுவிரலை நீட்டிக் காட்டுபவனை இரண்டு விரல்களை நீட்டியவன் கொலை செய்தான். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனின் கொலை செய்தவனின் மோட்டார் சைக்கிள் மருத்துவத்துறையுடன் சம்மந்தப்பட்டது. அவர்கள் ஊடாகவா போதை மருந்து விநியோகம் நடைபெறுகின்றது என்பதை விசாரனை செய்வது அவசியம்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோல்

போதைப்பொருள் உட்கொண்ட வெறியில் இறந்தவன் ஆடிய ஆட்டம் இது





