Home புதினங்களின் சங்கமம் வட்டிக்கு வாங்கிய பணத்தை தர வசதியில்லா விட்டால் என்னுடன் படு!! மதுஷனுக்கு விளக்கமறியல்

வட்டிக்கு வாங்கிய பணத்தை தர வசதியில்லா விட்டால் என்னுடன் படு!! மதுஷனுக்கு விளக்கமறியல்

வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை இணையம் ஊடாக பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்க நேற்று (15) உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றத்திற்காக களனியைச் சேர்ந்த தாரக மதுஷன் ஹேரத் என்ற சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான ஆபாச காட்சிகளை அனுப்பி, வட்டிக்கு பணம் செலுத்தாவிடில் தன்னுடன் இருக்குமாறு அழைத்ததன் மூலம் சந்தேகநபர் இணைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் முன்னர் பணிபுரிந்த இடத்தின் சிம் அட்டையே இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் இணையத்தளத்தில் விசாரணை நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.