யாழ் ஆயர் இல்ல குடியிருப்பு ஜெகன் பாதரின் உதவியாளரால் பல சிறுமிகள் துஸ்பிரயோகம்!! ஜெகன் பாதருக்கும் தொடர்பா?
அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் ஆயர் இல்லத்தால் பராமரிக்கப்படும் வெண்புரவிக் குடியிருப்பு தி்ட்ட பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதான சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்றை பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது அண்மையில் யாழ் போதனாவில் அதிகளவு மாத்திரைகளை உள்ளெடுத்து அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்ட நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை பொலிசாருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர் .இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினன சட்ட வைத்திய அதிகாரி முன் நேற்று முன்தினம் பொலிசார் முற்படுத்திய நிலையில் இன்றைய தினம் குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவு மற்றும் துஷப்பிரயோகத்தின் சந்தேகநபராக பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக ஊர்காவற்றை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர் அந்த குடியிருப்பு பகுதிக்கு பொறுப்பான ஆயர் இல்லத்ரைச் சேர்ந்த ஜெகன் பாதரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவங்களை மூடி மறைக்க ஜெகன் பாதர் உட்பட்டவர்கள் முயன்று பொலிசாருக்கு பணம் கொடுத்தாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுக்னறது. இருப்பினும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களின் கடும் முயற்சியிலேயே சிறுமிக்ள சட்டவைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டார்கள். அதே வேளை அங்கு வசிக்கும் ஏனைய சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முற்படுவதற்கு ஜெகன் பாதர் முட்டுக்கட்டையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
