புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் மின் வண்டியில் மோதி இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் பலி!!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானாரமாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.