Home புதினங்களின் சங்கமம் யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.அவரை பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.