புதினங்களின் சங்கமம்

யாழ் மண்கும்பான் பாடசாலையில் 10 வயது மாணவியை எஸ்லோன் பைப்பால் அடித்து உரித்தெடுத்த அதிபர்!! Photos

யாழ்ப்பாணம் தீவக வலய பாடசாலையான மண்கும்பான் அரசினல் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 வரை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.தரம் 5,4 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் புலமைப்பரிசில் பரீட்சைக்காக மேலதிக வகுப்பு அதிபரால் நடாத்தப்படுகின்றது. 12.07.2023 அன்று புதன் கிழமை தரம் 4 மாணவர்கள் கணித பாடத்தில் பிழையாக செய்ததால் அனைவருக்கும் எஸ்லோன் பைப்பால், பைப் உடையும் வரை அதிபர் முதுகில் அடித்துள்ளார். மாணவர்கள் அழுதும் சத்தம் கேட்டு அயலில் வேலைசெய்து கொண்டு இருந்த 2 பேர் போய் பார்த்த போது இங்கு ஒருத்தரும் வர வேண்டாம் என்று ஏசி அவர்களை அதிபர் துரத்தியுள்ளார். மாணவியின் முதுகில் தழும்பு ஏற்படும் அளவுக்கு அதிபர் அடித்துள்ள நிலையில் சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார்.இதன் போது ஒரு மாணவிக்கு மட்டும் 20 க்கு மேற்பட்ட அடி விழுந்துள்ளது. இதனால் இவர் யாழ்போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று வீடு திரும்பிய உள்ளார்.

சம்பவம் தொடர்பில் வேலணை பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தமது உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.