புதினங்களின் சங்கமம்

நாங்கள் பெரிய பிரச்சனையில் இருக்கின்றோம்… அதுதான் பிக்குவுடன் படுத்தோம்!! பிடிபட்ட பெண்கள் கூறியது என்ன?

நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டு தாக்குதலுக்குள்ளான இரு பெண்களும் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய பெண் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலில் காயமடைந்த பௌத்த பிக்கு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், நவகமுவ ஶ்ரீ சுமனராம விகாரைக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நவகமுவ ஶ்ரீ சுமனராம விகாரையில் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும்,குறித்த விகாரையில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லையெனவும் நவகமுவ பாதுகாப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த இரு பெண்களும் தாம் பெரிய பிரைச்சினையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த காணொளியில் அந்த பெண்களை தாக்கும் ஆண்கள் முகத்தை காட்டுமாறு இரு பெண்களிடமும் கூச்சலிடுகின்றனர்.

அதற்கு அந்த பெண்கள், ஐயோ வேண்டாம் அண்ணா என்றும் தாம் முகத்தை காட்டுவதாகவும் ஆனால் இவ்வாறு சத்தமிட வேண்டாம் எனவும் கெஞ்சுகின்றார்.

அதையடுத்து இளைஞர்கள், உங்களிற்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்றும் உறங்குவதற்கு பிக்குதான் கிடைத்தாரா? என்றும் வினவியுள்ளனர்.

அதற்கு பெண்கள் இருவரும், தாம் பெரிய பிரச்சினையில் உள்ளதாவும் ஆகவே, இவ்வாறு கூற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், யாரும் இல்லாததால் தான் பிக்குவுடன் உறங்கி விட்டு தற்பொழுது முகத்தை மூடி கொள்கின்கிறீர்களா? என்று சரமாரியாக தாக்குகின்றனர்.

இதையடுத்து பிக்குவை நோக்கிய இளைஞர்கள், அங்கு எம்முடன் பேசிவிட்டு இங்கு உங்கள் நாடாகத்தை நடத்துகிறீர்களா? என்று கேட்டு தாக்குகின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.