புதினங்களின் சங்கமம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது பஸ்சை எரித்தார் யாழ்ப்பாண வடிவேலு துவாரகேஸ்வரன்!!

புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் இந்துகலாச்சார அமைச்சர் மகேஸ்வரனின் தம்பியான யாழ்ப்பாண வடிவேலு என அழைக்கப்படும் துவாரகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் பெயர் குறிப்பிட்ட பணக்காரர்களில் ஒருவராவார். 1990ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் பிரதேசத்தில் ஏற்பட்ட பொருளாதாரத்தடை காரணமாக மண்ணெண்ணெய் கடை வைத்திருந்து பிழைப்பு நடாத்தி வந்த மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு அகன்ற பின்னர் 1996ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டுக்குள் பல கோடிரூபா உழைத்த ஒருவராவார். அவர் எவ்வாறு பணம் சம்பாதித்தார், எவ்வாறு விஜயகலா அக்காவைக் கலியாணம் கட்டினார் என்பது யாழில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். அத்துடன் மகேஸ்வரன் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் மகேஸ்வரனின் தம்பியான துவாரகேஸ்வரனுக்கும் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலாவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரின் அந்தரங்க செயலாளராக இருந்த ஆமிக்கார மேஜரினால் துவாரகேஸ்வரனுக்கு நல்லுார் கோவிலுக்கு முன் அசிட் வீசி அபிசேகம் செய்யப்பட்ட அனைத்து விடயங்களும் யாழ்ப்பாண மக்களுக்கு தெரிந்த விடயமாகும்.

அதன் பின்னர் துவாரகேஸ்வரன் வடக்கு மாகாணசபைத் தேர்தல் உட்பட பல தேர்தல்களில் போட்டியிட்டு கட்டுப்பணம் கூட மிஞ்சாதவாறு தோல்வியடைந்ததும் வரலாறு. வியாபாரத்தில் அண்ணனை விழுங்கிவிடக் கூடியவாறான குறுக்குமூளை தம்பி துவாரகேஸ்வரனுக்கு உள்ளது.

சகட்டு மேனிக்கு தனது எதிரிகளை துவாரகேஸ்வரன் துாற்றுவதில் வல்லமை மிக்கவர். தனக்கு சொந்தமான சமூகவலைத்தளங்களில் சிங்கம் போல் கர்ச்சனை செய்து அவரது ஆவேசமிக்க ஊடகப் பேட்டிகளை பார்த்து சிரித்தவர்கள் அதிகம். அதனால் அவர் பல தடவைகள் சிறைக்கு சென்று வந்தவர்…. இதன் காரணமாக அவரை யாழ்ப்பாண வடிவேலு என அழைப்பார். ஓரிரு வருடங்களாக குறித்த சிங்கம் அமைதி காத்து வந்தது. சிங்கம் கனடாவில் செற்றிலாகப் போகுது என்றும் சிங்கத்திற்கு வர்த்தகத்தில் பெரும் இழப்பு என்றும் பலரும் பலவாறாக கதைத்துக் கொண்டிருக்க சிங்கம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் செப்படி வித்தை ஒன்று செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 30ம் திகதி அதிகாலை மதுரங்குளிப் பகுதியில் துவாரகேஸ்வரனின் ஈஸ்வரா பஸ் 43 பயணிகளுடன் எரிந்து சாம்பலானது. குறித்த பஸ் துவாரகேஸ்வரனால் இன்சூரன்ஸ் பணத்திற்காக திட்டமிட்டு முற்று முழுதாக எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஸ் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் உள்ள கராஜில் பஸ்சின் நல்ல பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு போலி உதிரிப்பாகங்கள் பூட்டப்பட்டுள்ளது. அத்துடன் பஸ்சில் உள்ள இஞ்சினும் உடனடியாக சூடேறுவதற்கான செயற்பாடுகளும் செய்யபட்டுள்ளது. அதே நேரம் குறித்த பஸ்சில் 43 பயணிகள் இருந்ததாக கூறப்பட்டதும் பொய் எனவும் துவாரகேஸ்வரனுக்கு நெருக்கமானவர்களுடனும் ஒரு சில உண்மையான பயணிகளுடனுமே பஸ் கொழும்பு சென்றுள்ளது. பஸ் புத்தளத்தில் நிறுத்தப்பட்டு அனைவரும் சாப்பிட்ட பின்னர் மீண்டும் பஸ் புறப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் போதே பஸ்சில் தீ பரவியதாம். ஆனால் பயணிகள் எவருக்கும் காயங்கள் இல்லை. அத்துடன் பயணிகளால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டு ஒரு சேதாரமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் பஸ் எரிந்து எலும்புக்கூடாகும்வரை பஸ் தீயை அணைப்பதற்கு ஒருவரும் முன்னிற்கவில்லை.

பஸ் புல் இன்சூரன் செய்யப்பட்டதாம். கிட்டத்தட்ட 3 கோடிகளுக்கு மேல் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். ஆனால் அந்த பஸ் 7 வருடத்திற்கு மேல் ஓடி நொந்து நுாலாகி அதன் பொடியும் ஈடாடத் தொடங்கி விட்டதாம்.. விற்பதாக இருந்தால் 1 கோடி ரூபாவுக்கே விற்கலாம்…. அதனால் பஸ்சில் இருந்த நல்ல பாகங்களை எல்லாம் கழற்றிய பின் சிங்கம் தனது குறுக்கு மூளையைப் பாவித்து பஸ்சை எரித்துவிட்டது…..

திட்டமிட்டு எரித்த பஸ்சிற்கு கோடிக்கணக்கான காப்புறுதி கொடுக்கப் போகும் அந்த காப்புறுதி நிறுவனத்தின் ஏமாளிகளை நினைக்க……..

குறிப்பு –  துவாரகேஸ்வரனின்  பஸ் சேவை பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது திறம்பட நடக்கும் ஒரு சேவையாகும். கொழும்பு – யாழ் பஸ்சேவையில் ஈடுபடும் சில பஸ்களின் முதலாளிகள் மற்றும் சாரதி, நடத்துனர்கள் பயணிகளுடன் காவாலித்தனமாக நடக்கும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. அத்துடன்  மூட்டைப் பூச்சித் தொல்லைகளுடன் காணப்படும் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுபடுகின்றன. துவாரகேஸ்வரனின் பஸ்சேவை தரமானது என்பதை கவனத்தில் எடுத்தாலும் அவரது குறுக்கு மூளையின் திறனை மட்டுமே நாம்  குறிப்பிட்டுள்ளோம்…..