22 வயது சிங்கள அத்தையுடன் உறவு கொண்டதை கணவனின் அக்கா மகன் பலரிடம் கூறியதால் பொலிசில் புகார்!!
சமுர்த்தி வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு விட்டுவீட்டுக்கு வந்த 22 வயதான திருமணமான பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவரின் உறவினரை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரது மூத்த சகோதரியின் மகன் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் கணவரிடம் கூறியுள்ளார்.
இதன் பின்னர் தனது கௌரவம் மற்றும் சமூகத்தில் முகம் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால், கணவன் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.
எனினும் குற்றத்தை செய்த சந்தேக நபர், சம்பவம் குறித்து கிராமத்தில் ஆங்காங்கே கூறி வந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் சம்பவம் தொடர்பாக எப்பாவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
