வவுனியா பாஸ்போட் அலுவலகத்தின் முன் பொலிசாரின் கண் முன்னேயே பச்சைத் துாசணத்தால் பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடி!! (வீடியோ)
வவுனியாவில் அமைந்துள்ள பாஸ்போட் அலுவலகத்தின் முன் அங்கு பாஸ்போட் பெற வருபவர்களுக்கு, வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் பெற்றுவருகின்ற ரவுடிகளால் பாஸ் போட் பெற வரும் அப்பாவிகள் பெரும் இ்ன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். வவுனியாப் பொலிசாரில் சிலரும் குறித்த ரவுடிகளுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடித்து வருவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றார்கள். பொலிசார் நிற்கும் போதே பச்சைத் துாசணத்தால் ரவுடி ஒருவன் பொதுமகனை அச்சுறுத்தும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

