புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவிலில் விபச்சார வீட்டை சுற்றி வளைத்த பொதுமக்கள்!! இரு பெண்கள் பிடிபட்டனர்!! ஒருவன் ஓடித்தப்பினான்!!

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மடக்கிப்பிடித்துள்ள நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு ஆண் தப்பி ஓடியுள்ளார்.

குளப்பிட்டி சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சமூக பிறழ்வான நடத்தையில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததுடன்,சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். எனினும் பொலிஸார் அதனை கண்டுகொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டை முற்றுகையிட்டு கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த இளைஞர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் ஒரு ஆணும் இரு பெண்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.