Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட 23 வயது இளைஞன்..வெளியான அதிர்ச்சி தகவல்.!

வவுனியாவில் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட 23 வயது இளைஞன்..வெளியான அதிர்ச்சி தகவல்.!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (28) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளர்.

குறித்த இளைஞன் அடுப்பு பற்ற வைக்கும் போது தீ பற்றி உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அவர் தொழிலுக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.